திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய மாவட்ட தலைவர் நாகராஜன் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை கடிதம் ஒன்று எழுதியுள்ளார் அதில் தமிழக அரசின் அனைத்து முறைகளுக்கும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் தரிசன கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் விழா காலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் சமயங்களிலும் இந்து சமய அறநிலைக்குத் துறைக்கு சொந்தமான கோவில்களில் டிக்கெட்டுகள் தெரிந்து விட்டதாக கூறி அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது மேலும் வெளி மாநிலம் உள்ளிட்ட தொலை தூரங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைன் கட்டண முறையை செயல்படுத்த இந்து சமய அறநிலையத்துறை முன் வர வேண்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.