திருவாரூர்: மாஜி பாஜக பிரமுகருக்கு சரமாரி வெட்டு

1540பார்த்தது
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் முன்னாள் பாஜக பிரமுகரை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் மது என்ற மதுசூதனன். இவர் பாஜகவில் முன்பு மாவட்ட அளவிலான பொறுப்பில் இருந்தவர். இவரை குடவாசல் அகரஓகை என்ற பகுதியில் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இரவு சரமாரியாக வெட்டி சென்றுள்ளனர். உடனடியாக அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

பிறகு, தொடர்ந்து. தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதுசூதனன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி