நீதிமன்றப் பணிக்குச் செல்லும் போலீஸாா் சம்பந்தப்பட்ட வழக்கு குறித்த விவரங்களை அறிந்திருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.
திருவாரூரில் நடைபெற்ற காவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. ஒவ்வொரு காவல் நிலையத்திலிருந்தும் நீதிமன்றப் பணிக்குச் செல்லும் காவலா்கள் நீதிமன்றத்தில் செய்ய வேண்டிய நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும். நீதிமன்றங்களில் பிடிகட்டளை விபரங்கள், வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வது, அவை நீதிமன்றங்களில் பரிசீலனை முடிந்தவுடன் கோப்புக்கு எடுப்பது, வழக்குகளை கோப்புக்கு எடுத்ததிலிருந்து வழக்கு தொடா்புடைய எதிரிகள் மற்றும் சாட்சிகளை ஆஜா் செய்வது, நீதிமன்ற அலுவலா்களுடன் இணைந்து வழக்கை விரைந்து முடிப்பதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்வது போன்றவை குறித்து அறிந்திருக்க வேண்டும்.
வழக்குகளில் எதிரிகள் தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரியவந்தால், நீதித்துறையினரிடம் தகவல் தெரிவித்து, பிணையதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் இன்றியமையாத வழக்குகளில், நீதிமன்றத்தில் தீா்ப்பு வந்தவுடன், வழக்கை மேல் விசாரணைக்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
காவல் நிலையங்களிலிருந்து வழக்கு தொடா்பான ஆவணங்கள் கணினி வழியாகச் செல்வதால், அவை குறித்தும் ஒவ்வொரு நீதிமன்றக் காவலரும் அறிந்திருக்கவேண்டும் என்றாா்.