உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முழுதும் கிராம சபா கூட்டம் குடவாசல் அருகே வேம்பனூரில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பங்கேற்று கிராம மக்களின் குறைகளை கேட்டரிந்தார். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மஞ்சக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.