திருத்துறைப்பூண்டி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை வழங்க கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கிராம ஊராட்சிகளில் வாா்டுகளில் சுழற்சி முறையில் நடைபெறும் பெயரளவில் வேலை கொடுப்பதை நிறுத்தி ஊராட்சிகளில் பயனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், வேலை செய்தவா்களுக்கு உடனடியாக கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியின் ஒன்றிய செயலாளா் முத்துக்குமாரசுவாமி தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய ஆணையா் தெய்வநாயகி, மேலாளா் வசந்தன் உள்ளிட்டோா் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.