தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்தக் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வாழ்த்துச் செய்தியில், ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவர்களின் புன்னகை. விலைமதிப்பற்றது. குழந்தைகளின் மனது, பொறாமை, பழிவாங்குதல், ஏமாற்றுதல் போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிராமல், தெளிந்த நீரைப் போல் பரிசுத்தமானது என பதிவிட்டுள்ளார்.