முன் ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் நடிகை கஸ்தூரியை பிடிக்க இரு தனிப்படைகள் அமைத்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய கஸ்தூரி மீது மதுரை திருநகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கஸ்தூரி முன் ஜாமீன் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்த நிலையில், அவரை கைது செய்ய இரு தனிப்படை போலீசாரும் சென்னை விரைகின்றனர்.