தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திமுகவினர் தமிழக முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடியில் நேற்று இரவு திமுக நகர செயலாளர் வீரா. கணேசன் தலைமையில் திமுகவின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.