ஆட்சியாளர்களால் ஒப்பந்த தொழிலாளர்கள் உரிமை பறிப்பு

68பார்த்தது
ஆட்சியாளர்களால் ஒப்பந்த தொழிலாளர்கள் உரிமை பறிப்பு
சிஐடியூ அமைப்பு தினத்தையொட்டி சிறப்பு பேரவை கூட்டம் திருவாரூர் மாவட்ட சிஐடியூ செயலாளர் முருகையன் தலைமையில் திருவாரூரில் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆண்கள், பெண்கள் என திரளானோர் கலந்துகொண்டு பேசுகையில் தொழிலாளர்கள் நலன் பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்றனர்.

தொடர்ந்து கூட்டத்தில் சிஐடியூ தொழிற்சங்கத்தின் மாநிலத்தலைவர் சௌந்தரராஜன் சிறப்புரையாற்றுகையில், மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையில் சிறப்பு திட்டங்களை கொண்டுவந்து தொழிலாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்க முன்வரவேண்டும் எனவும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் சமவேலைக்கு சம ஊதியம் வழங்கப்படாமல் தொழிலாளர்கள் நலன் பறிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்தி