மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (நவ., 08) இரவு விடிய விடிய கனமழை பெய்த நிலையில், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குத்தாலம் தாலுக்கா மங்கநல்லூர் அடுத்த நெய்குப்பை பகுதியில் வயல்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் சம்பா நாற்றுகள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலைக்கு ஆளாகி உள்ளனர்.