உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு மீண்டும் $300 பில்லியனை தாண்டியுள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த 4 நாட்களில் மட்டும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 28% உயர்ந்துள்ளது. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு மீண்டும் $300 பில்லியனைத் தாண்டி, $313.7 பில்லியனாக உயர்ந்துள்ளது