விடிய விடிய நடைபெற்ற கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி

62பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. முன்னதாக மன்னார்குடி பெரியார் சிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் மன்னார்குடியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மன்னார்குடி பந்தலடி கீழ்ப்புறத்தில் விழா மேடையை அடைந்தது. இதனைத் தொடர்ந்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, கவிஞர் நந்தலாலா, புதுகை பூபாலம் கலைக்குழுவினரின் நையாண்டி தர்பார், 10, 12 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்குதல், புத்தக வெளியீட்டு விழா, கவியரங்கம் என விடிய விடிய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி