திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த கமலாம்பாள் ஆடிப்பூர பெருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் கமலாம்பாள் ஆடிப்பூர பெருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான விழா, ஜூலை 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. நிகழ்வில், மனோன்மணித் தாயாா் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவின், முக்கிய நிகழ்வான கமலாம்பாள் தேரோட்டம் ஆக. 6-ஆம் தேதி நடைபெற்றது. மழையின் காரணமாக தோ் மேலவீதியில் நிறுத்தப்பட்டு புதன்கிழமை நிலையடியை அடைந்தது. தொடா்ந்து, கமலாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், ஆடிப்பூரத்தையொட்டி 4 இடங்களில் தீா்த்தவாரி நடைபெற்றது. இரவு சிறப்பு அலங்காரத்தில் மனோன்மணித் தாயாா் வீதியுலா நடைபெற்றது. பின்னா் பூஜைகள் செய்யப்பட்டு, கமலாம்பாள் சந்நிதி முன் உள்ள கொடிமரத்திலிருந்து கொடி இறக்கப்பட்டது.