திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் படிப்படியாக மழை குறைந்ததால் வயல்களில் தேங்கிய நீர் வடிய தொடங்கியுள்ளது. இருந்தப்போதும் மன்னார்குடி அருகே
காரக்கோட்டை, சின்ன காரக்கோட்டை, உடையார் தெரு, ராணித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் வளரத்தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த அதிகான மழையால் 300 ஏக்கர் சம்பா வயல்களில் தேங்கிய மழை நீர் இன்றும் வடியவில்லை. அங்கு சொல்லும் வாய்க்கால் தூர்வாரப்படாததால் நீர் நிரம்பி இருக்கறைகளை தாண்டி தண்ணீர் அருகில் உள்ள வயல்களில் பாய்க்கிறது. இதநாள் தண்ணீர் வடிய வழியின்றி நீரில் பயிர்கள் மூழ்கி வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்பதும் வேளாண் அதிகாரிகள் நேரில் வந்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.