அன்னை சிவகாமி நகரில் கால்பந்து போட்டி நடைபெற்றது.

80பார்த்தது
அன்னை சிவகாமி நகரில் கால்பந்து போட்டி நடைபெற்றது.
*திருவொற்றியூரில் கால்பந்து போட்டி* திருவொற்றியூர். ‌ இளம் கால்பந்தாட்ட வீரர்களை கண்டறியும் வகையில் மாவட்ட அளவிலான சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டி எண்ணூர் அன்னை சிவகாமி நகர் விளையாட்டு திடலில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் லயன் வீ. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. முடிவில் ஒரகூடம் அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றிபெற்ற அணியினருக்கு கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன. மற்றும் இளம் கால்பந்தாட்ட வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மெடல்கள் பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியினை வழக்கறிஞர் எஸ். ராஜா ஆர். குமரன் ஆகியோர் ஒருங்கி ணைப்புடன் கே. சதீஷ் ஏற்பாடு செய்திருந்தார். இதில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த இளம் கால்பந்தாட்ட வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி