சைதாப்பேட்டை கூட்டுறவு சங்கம் சார்பில் ஆவின் பாலகம் திறப்பு

52பார்த்தது
செங்குன்றத்தில் சைதாப்பேட்டை கூட்டுறவு சங்கம் சூப்பர் மார்க்கெட்  வளாகத்தில் ஆவின் பாலகம் திறக்கும் நிகழ்ச்சி பொது மேலாளர் நீதிராஜன் தலைமையில் நடைபெற்றது. மேலாளர் தணிகாசலம் அனைவரையும் வரவேற்றார்.
மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளருமான மாதவரம் எஸ். சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

ஆவின் பாலகத்தில் தினந்தோறும் பயன்படுத்தும் பால், நெய், வெண்ணெய், இனிப்பு - கார வகைகள் உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதில் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மன்ற தலைவர் தமிழரசி குமார், துணைத் தலைவர் ஆர்இஆர். விப்ரநாராயணன், முன்னாள் துணைத்தலைவர் இரா. ஏ. பாபு,   ஆர். டி. குமார், திமுக நிர்வாகிகள் இ. பாஸ்கரன், கே. கபிலன், முனீஸ்வரி சுகுமார், ஆர். சீனிவாசன், ஆர்எம்பி. குமார், என்எம்டி. இளங்கோவன், கே. கே. ராமன், என். சகாதேவன், லதா கணேசன், ஆர். டி. சுதாகர், ஆர். டி. சுரேந்தர், என். அப்துல்சமது, வி. மதிவாணன், ஷாம் கார்த்திக், சி. மோகன், அருண் தீபக், மகேந்திரன், எம். மோகன்குமார், ரவீந்திரன், கேஎல்என். லெனின்குமார், என். பாலாஜி, இ. உமாபதி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி