மருத்துவமனை மாடியிலிருந்து குதித்த நோயாளி பலி

4440பார்த்தது
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.

திருவள்ளூர் அடுத்த அரண்வாயில் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(55) அங்குள்ள பீர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில் ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய்க்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளர். சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி செவிலியர்கள் அவருடைய கை கால்களை படுக்கையில் கட்டி போட்டு வைத்திருந்தாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று காலை முதலாவது மாடியில் இருந்து குதித்து ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கும் இடத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில், நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அங்கேயே அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி