மிரண்ட பசு மாடுகள் இருசக்கர வாகனத்தை நிறுத்திய பெண்

65பார்த்தது
மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலை மற்றும் தெரு பகுதிகளில் பசுமாடுகள் , எருமை மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் அடிசன் நகர் ஸ்ரீ ராகவேந்திரா தெரு. பகுதியில் இரட்சணா தேவி என்ற பெண் இரு சக்கர வாகனத்தில் வந்து தனது வீட்டின் முன்பு முன்பு நிறுத்தி உள்ளார் அப்போது அந்த சாலையில் சுற்றித்திரிந்த இரு பசுமாடுகள் திடீரென மிரண்டு அந்த பெண்னை நோக்கி வேகமாக ஓடி வந்தன அதனை கண்டு சுதாரித்த அவர் பதறி அடித்து அங்கிருந்து ஓடினார். அவர் ஓடிய நிலையில் மாடுகள் அவர் ஒட்டி வந்த ஸ்கூட்டியை வேகமாக இடித்து தள்ளக்கூடிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது அதில் அந்த பெண் உயிர் பயத்துடன் பதறி போய் நிற்கும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும் பசு மாடுகள் மிரண்டதில் மயிரிழையில் பெண் ஒருவர் உயிர்
தப்பியது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாடுகள் முட்டியதில் பைக் சேதாரம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி