மூன்றே மாதத்தில் மாயமான புதிய ரோடு

62பார்த்தது
மூன்றே மாதத்தில் மாயமான புதிய ரோடு
பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்த, பல்வேறு குறுகிய தரைப்பாலங்கள் கடந்த ஆண்டு அகலப்படுத்தப்பட்டன.வடகுப்பம், கர்லம்பாக்கம், அத்திமாஞ்சேரிபேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து பாலங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டன.

இறுதிகட்டமாக, கர்லம்பாக்கம் அருகே இரண்டு தரைப்பாலங்கள் சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டு, அகலப்படுத்தப்பட்டன. இந்த பாலங்களுக்கான இணைப்பு சாலையும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் புதிதாக போடப்பட்டன.

தற்போது இந்த தரைப்பாலங்களின் இணைப்பு சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதனால், வாகனஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். புதிய பாலத்தை நம்பி வேகமாக கடக்கும் வாகனங்கள், இந்த பள்ளங்களில் சிக்கி நிலை தடுமாறுகின்றன. விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. பாலங்களின் இணைப்பு சாலையை உறுதியாக அமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி