திமுக வேட்பாளருக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவிப்பு

1544பார்த்தது
நாடாளுமன்றத் தேர்தல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் எஸ். ஜெகத்ரட்சகன் திருத்தணி தொகுதியில் உள்ள நெமிலி, என்.என். கண்டிகை, முருக்கம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து திமுக நிறைவேற்றிய திட்டங்கள் விலைக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பல்வேறு கிராமங்களில் மலர் தூவியும் பட்டாசு வெடித்து மேலத்தாளங்களுடன் உற்சாகமாக வரவேற்பு வழங்கப்பட்டது.

அப்போது காசிநாதபுரம் கூட்டுச்சாலையில் பொதுமக்கள் ஒன்றுகூடி பெண்கள் மலர் தூவி வரவேற்றனர். பிரச்சார வாகனத்தில் இருந்த வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். பிரச்சாரத்தில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம். பூபதி உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி