காங்கிரஸ் வேட்பாளருக்கு நடிகர் வாசுவிக்ரமன் வாக்கு சேகரிப்பு

85பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவலாங்காடு, சின்னம்மாபேட்டை ஊராட்சிகளில் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து திமுக பேச்சாளர் நடிகர் வாசு விக்ரமன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் எம்எல்ஏ. , ஒன்றிய செயாலாளர் மகாலிங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்த வேனில் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கலைஞர் சாகும் வரை தமிழை மூச்சாக சுவாசித்தவர் தமிழை உள்வாங்கி தமிழை வெளியே விட்டவர் கலைஞர் என்றும், உயிர் போகும் வரை தமிழ் என்று இருந்தவர் கலைஞர்.   அவர் விட்ட மூச்சு தான் தமிழ்.   அவர் மூச்சை வைத்து தான்  நீ பேச்சாக பேசுகிறாய் என்று சீமானை வசைபாடினார்.   நீயெல்லாம் தலைவரைப் பற்றி பேசலாமா?   உனக்கு அந்த தகுதி இருக்கிறதா. உனக்கு வயசு இருக்கிறதா.   அவரைப் பற்றியோ எங்கள் கட்சியை பற்றியோ எங்கள் தலைவரைப் பற்றியோ பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றுகேள்வி எழுப்பினார். திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் தான் இந்தியா கூட்டணி உருவாகி உள்ளது. ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் அடுத்த பிரதமர் என்று முடிவாகிவிட்டது. எனவே திருவள்ளூர் தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு நடிகர் வாசு விக்ரமன் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி