திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா

72பார்த்தது
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் வரும் 29-ம் தேதி ஆடிக்கிருத்திகை விழா மற்றும் சரவண பொய்கை திருக்குளத்தில் முதல் நாள் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.  5 நாட்கள்  நடைபெற உள்ள விழாவில் 2 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள்  பங்கேற்று முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கபப்டுகின்றது. இந் நிலையில் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில்  விழா ஏற்பாடுகள் தொடர்பான  அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று கலந்தாயுவுக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாச பெருமாள், போக்குவரத்து துறை பொது மேலாளர், கோட்டாட்சியர் தீபா, திருக்கோயில் இணை ஆணையர் கூடுதல் பொறுப்பு  அருணாச்சலம், நகராட்சி ஆணையர் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று விழாவில் தரும் பக்தர்கள்  தடையின்றி சாமி தரிசனம் செய்யவும்,  தூய்மை, சுகாதாரம். குடிநீர், மின்சாரம், தற்காலிக பேருந்து நிலையங்கள், மருத்துவ முகாம்கள், கழிவறைகள், மின் விளக்குகள், பக்தர்கள் தங்கும் அறைகள், போக்குவரத்து, மற்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பபு  தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு அனைத்துதுறை அதிகாரிகளும்   ஒருங்கிணைந்து செயல்ப்பட்டு விழா சிறப்பாக நடைபெற பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் டிஎஸ்பி விக்னேஷ், உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி