பள்ளியில் மழைநீர் தேங்குவதை தடுக்க எம்எல்ஏவிடம் கோரிக்கை

63பார்த்தது
பள்ளியில் மழைநீர் தேங்குவதை தடுக்க எம்எல்ஏவிடம் கோரிக்கை
பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைவிட தாழ்வாக உள்ளது. ஆகவே இப்பள்ளியில் அதிக மழை நீர் தேங்குகிறது. ஆனால் ஆண்கள் பள்ளியில் தகுந்த உயரம் உள்ளதால் தேங்கும் மழை நீரை அதன் அருகே அமைந்துள்ள சாலையின் வடிகால்வாயில் இணைக்கலாம். இவ்வாறு இணைத்து 2 பள்ளிக்கிடையே தடுப்பு சுவர் அமைத்தால் ஆண்கள் பள்ளியின் மழை நீர் பெண்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க முடியும்.

மேலும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளிக்கு விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த அருகாமையில் மெட்ரோ வேலை செய்வதற்காக தோண்டி எடுக்கும் மண்ணை விளையாட்டு மைதானத்தில் கொட்டினால் மழை நீர் தேங்குவதை ஓரளவு தடுக்கலாம். எனவே விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமியிடம் பூந்தமல்லி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செங்குட்டுவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி