பூந்தமல்லியில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குடிசைகள் தீயில் எரிந்து நாசம்.
உரிய நேரத்தில் தீ அனைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு.
பூந்தமல்லி அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் சாம்சன் நேற்று இவர் வீட்டில் இருந்தபோது திடீரென வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது இதனை கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்து அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கொழுந்து விட்டு எறிந்த தீயை அணைக்க முயன்றனர் ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் இது குறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து இரண்டு குடிசை வீடுகளில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் தீயில் எரிருந்து நாசமானது இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் மேலும் தீ விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர் உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதமும், உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது.