குக்கரில் அடிக்கடி வரும் பிரச்சனைகளில் ஒன்று தண்ணீர் வெளியே கசிவது. இதற்கு பொதுவான காரணம் சுத்தமின்மை. சுத்தம் செய்வதில் அதற்கென சில நுணுக்கங்களை பயன்படுத்த வேண்டும். ரப்பர் தளர்வாக இருந்தால் அதை உடனே மாற்ற வேண்டும், தளர்வாவதை தவிர்க்க சமைத்த பிறகு குளிர்ந்த நீரில் ரப்பரை போடலாம், குக்கரின் விசிலை திறந்து சுத்தம் செய்யலாம். குக்கரில் இருந்து தண்ணீர் வராமல் இருக்க மூடியை சுற்றி எண்ணெய் தடவவும்.