சிலர் சாப்பிட்ட பிறகு குளிப்பார்கள், இது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். குளிக்கும் போது உடல் குளிர்ச்சி அடையும், இரத்த ஓட்டம் உடலின் அனைத்து பக்கமும் அதிகமாக இருக்கும். அதனால் குளிப்பதற்கு முன்னர் சாப்பிட்டிருந்தால் உணவுகள் செரிமானமாகாது. அவை வயிற்றிலேயே தங்குவதால் அஜீரணம், வயிற்று சம்மந்தமான கோளாறு, தோல் பிரச்சனை ஏற்படும். அதுவே குளித்து விட்டு சாப்பிடுவதால் இந்த தொல்லை வராது.