பல்லவ பேரரசன் நிருபதுங்க வர்மன் விழுப்புரத்திற்கு, விஜயநிருபதுங்க செய்ந்தாங்கிய சதுர்வேதி மங்கலம் என தனது பெயரை இட்டு நான்கு வேதமும் ஓதும் அந்தணர்களுக்கு தானமாக வழங்கியிருக்கிறான். விஜயநிருபதுங்க செய்ந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம், ஜனநாதச் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலம் (1265) முதல் விழுப்பரையபுரம் - விழுப்புரம் என அழைக்கப்பட்டு வருகிறது.