கேரளாவின் கொச்சி மரைன் டிரைவிற்கு வந்தவர்கள் கடல் கன்னியைக் கண்டு வியந்தனர். நேற்று (நவ., 20) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடல் கன்னியை காண குவிந்தனர். மரைன் டிரைவில் உள்ள வானவில் பாலத்தில் படுத்திருந்த கடல் கன்னி, மீன்களை உண்ணாமல் பாதுகாக்க வேண்டும் என்ற வாசகத்துடன் விழிப்புணர்வில் ஈடுபட்டார். மீன் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல என்றும், மீன்கள் மிகவும் மாசுபட்ட சூழலில் வாழ்கின்றன என்றும் கூறினார். இவர் பீட்டா அமைப்பைச் சேர்ந்த ஷில்பா என்பது குறிப்பிடத்தக்கது.