சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையைக் காண்பதற்கு, சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இந்த நிலையில் மண்டல பூஜை, மகர விளக்கு சீசனை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்பாட் புக்கிங் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.