பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணி கோவிலில் கந்த சஷ்டி விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 7ஆம் தேதி சூரசம்கார நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறுகிறது
கொடியேற்று விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது
வருகிற 7 ஆம் தேதி சூரசம்கார நிகழ்வும் எட்டாம் தேதி திருக்கல்யாண நிகழ்வுடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது
கோவில் கொடி மரத்தில் மயில் மற்றும் வேல்கொடி ஏற்றப்பட்டது கொடியேற்று விழாவில்
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியரை நீண்ட வரிசையில் காத்திருந்து கொட்டும் மழையில் தரிசனம் செய்தனர்.