தென்காசி வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் திருமலைசாமி. இவரது மனைவி சசிகலா (35). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமலைசாமிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சசிகலாவுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டபோது, சசிகலாவை இரும்பு நாற்காலியால் திருமலைசாமி தாக்கியுள்ளார். படுகாயமடைந்த சசிகலா புளியங்குடி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.