முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அவரது திருவுருவ சிலைக்கு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நாலூர் பகுதியில் அதிமுக
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது திருவருவ சிலைக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் கருப்பு சட்டை அணிந்தவாறு
தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது நினைவுகளை கட்சியினருடன் இணைந்து நினைவு கூர்ந்தனர் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி அவரது நினைவு நாளை சிறப்பித்தனர்.
இதில்
முன்னால் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்
பொன் ராஜா ஒன்றிய கழகச் செயலாளர் நாலூர் முத்துக்குமார் கொண்டக்கரை அமிர்தலிங்கம் பானு பிரசாத் செல்வகுமார் உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.