திமுக வேரூன்ற காரணமாய் அமைந்த மெரட்டூர் கிராம மக்களுக்கு சுகாதாரமில்லாத குடிநீர் வினியோகம்: 100 நாள் வேலை வருடமாக வழங்கப்படாமல் வேலை இன்றி பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரை முற்றுகையிட்ட மெரட்டூர் கிராம மக்கள் தங்களுக்கு சுகாதாரமற்ற முறையில் உப்பு தண்ணீர் குடிநீராக விநியோகப்பட்டு வருவது நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடுகிறது என்றும் எங்கள் பஞ்சாயத்தில் ஒரு வருடமாக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் பணி வழங்கப்படவில்லை என தெரிவித்தனர். பட்டியலின ஏழைமக்கள் வசிக்கும் கிராமத்தில் பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டும் என்றும் 100 நாள் வேலைப் பணிகளை முறைப்படுத்த மீஞ்சூர் ஒன்றிய ஆணையர் இதுவரை பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர்