இந்தியா முழுவதும் இன்று (செப்டம்பர் 7) விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயக சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாக்களுள் ஒன்று. இந்நிலையில் இந்த இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொதுவாக மக்கள் தங்கள் பகுதிக்கென ஒரு விநாயகர் வாங்கி சிறப்பு தரிசனத்திற்காக வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் சென்னையில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை வளசரவாக்கம் சிவன் கோயில் அருகே வைக்கப்பட்டுள்ள விவசாய விநாயகர் அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மண்வளத்தை காக்கும் முயற்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த விவசாயி கோலத்தில் விநாயகரை வைத்திருப்பதாக நிர்வாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விநாயாகரை பார்க்க அப்பகுதி மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் இன்றைய சிறப்பாக விவசாயி போல் வேடம் அணிந்த விநாயகருக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.