போதை மாத்திரை, கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது.

71பார்த்தது
போதை மாத்திரை, கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது.
திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஏ. எஸ். பி. , விவேகானந்தா சுக்லா தலைமையில் தனிப்படை போலீசார் திருவள்ளூர், காக்களூர் மற்றும் திருவள்ளூர் பஸ் நிலையம், காக்களூர் ஏரிக்கரை ஆகிய பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


அப்போது காக்களூர் ஏரிக்கரை அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் பிடித்து நடத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் எம். ஜி. எம். , நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த தயாளன், 23 என தெரிந்தது. மேலும் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போது 11 விலை உயர்ந்த மொபைல் போன்கள், 12 போதை மாத்திரைகள், 10 ஊசி, வீச்சரிவாள், ஒன்றரை கிலோ கஞ்சா, 70, 000 ரூபாய் பறிமுதல் செய்து திருவள்ளூர் போதைப்பிரிவு மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஒன்றரை கிலோ கஞ்சா மதிப்பு 60, 000 ரூபாய் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போதைப்பிரிவு மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you