புனித செபாஸ்டியர் ஆலய 72 ஆம் ஆண்டு திருவிழா திருத்தேர் பவனி

53பார்த்தது
சென்னை மாதவரத்தில் அமைந்துள்ள புனித செபாஸ்டியர் கிறித்தவ பேராலயத்தில் 72 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 31ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
தினமும் திருப்பலிகளுடன் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில் திருப்பலி மற்றும் திருத்தேர் பவணியை உதகை மறை மாவட்ட ஆயர் மேதகு டாக்டர் அமல்ராஜ் , பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் மேதகு டாக்டர் ஜூட் பால்ராஜ் , ஆலய பங்குத்தந்தை மைக்கேல் ஆனந்த் உள்ளிட்டோர் ஆலயத்தில் திருப்பலி மற்றும் தேவ இசை பாடல்களுடன் ஆயர்கள் முன்னிலையில் பிரார்த்தனைகள் செய்யப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டு தேர்பவனி புறப்பட்டது.

தமிழகத்தில் பல ஊர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மற்றும் மாதவரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் சுமார் 3000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு திருத்தேர் பவனியின் போது தேவ பாடல்களை பாடியும் உப்பை தூவியும் ஊர்வலமாக சென்றனர்.

பாரம்பரியமிக்க இந்த மூன்று வகை தேரில் முதலாவதாக காவல் தூதர் முன்னே செல்ல இரண்டாவது தேரில் அன்னை மரியாள் மற்றும் மூன்றாவது தேரில் புனித செபஸ்தியார் வண்ண விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அனைத்து மக்களும் தரிசிக்கும் வகையில் இந்த திருத்தேர் பவனி ஊர்வலம் சென்றது.

தொடர்புடைய செய்தி