திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அலமாதி ஊராட்சியில் நல்லூரில் அமைந்த எடப்பாளையத்தில் 69. 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நான்கு வகுப்பறை கட்டிடங்கள் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் திறந்து வைத்தார் பின்னர் சோழவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகளை நட்ட போது அவரிடம் பள்ளியில் முறையான சுகாதாரமான கழிப்பிடம் இல்லை என ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் புகார் தெரிவித்தனர் சுடுகாட்டிற்கு பாதை நியாய விலை கடை ஈமச்சடங்கு கட்டிடம் உள்ளிட்டவைகளை அமைத்து தருவதாக தேர்தலின் போது வாக்குறுதி அளித்த நிலையில் அவற்றையும் உடனடியாக செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர், பின்னர் நியாய விலை கடையில் விற்பனையை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதேபோன்று நல்லூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் சோழவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் நலன் கருதி கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ சுதர்சனம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் சோழவரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.