மணலி புதுநகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சரியான முறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில்லை சரியான கழிவறை இல்லை தண்ணீர் வருவதில்லை வகுப்பறைகள் சரியாக இல்லை என கூறி மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் பகுதியில் இயங்கி வருகிறது அரசு உயர்நிலைப்பள்ளி இந்தப் பள்ளியில் கடந்த சில மாதங்களாகவே சரியான முறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில்லை என்றும் அவ்வப்போது ஆசிரியர்கள் விடுப்பில் சென்று விடுகிறார்கள் என்றும் வகுப்பறைகள் சரியில்லை அமர்வதற்கு இருக்கைகள் இல்லை மின்விசிறி இல்லை கழிவறையில் தண்ணீர் வருவதில்லை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ மாணவியர்கள் மணலி புதுநகர் சாலையில் அமர்ந்து பெற்றோருடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களுடன் மணலி புதுநகர் காவல் நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் பெற்றோர்கள் நாங்கள் எங்களது கோரிக்கைகளை பலமுறை பள்ளியில் தெரிவித்துள்ளோம் இதுவரை அவைகளை பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.