திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முன்பு கிராம சமுதாய செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக 3000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பணி உயர்வு ஆன்லைன் பணிகளை நிர்பந்தப்பதை தவிர்க்கவும் பணிச்சுமை மன அழுத்தம் கொடுப்பதை கைவிடக் கோரியும் வீட்டு வாடகை பணியை பெற வலியுறுத்தியும் என ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாநிலத் துணைத் தலைவர் கற்பகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் கோமதி மாவட்ட செயலாளர் சுதா உள்ளிட்ட செவிலியர்கள் திரளாக பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர்