சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் கடும் அவதி

65பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுப்பகுதிகளில் உள்ள 50கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக கும்மிடிப்பூண்டி வந்து செல்வது வழக்கம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள 100கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கும்மிடிப்பூண்டி பஜாரில் பொருட்களை வாங்கி செல்வர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பினரும் பயணிக்கும் முக்கிய பாதையாக சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கம் அமைந்துள்ளது.
இரவு, பகல் என எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இரவு நேரங்களில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் பயணிக்கும் போது சாலையில் திடீரென குறுக்கிடும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்பட்டு நிலைதடுமாறி இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைவது தொடர்கதையாகி வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை சிறை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை போல கும்மிடிப்பூண்டி பஜாரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரியும் மாடுகளை சிறை பிடித்து அபராதம் விதித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி