மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

85பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
பூவலம்பேடு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் கும்முடிபூண்டி சட்ட மன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று தீர்வு

திருவள்ளூர் மாவட்டம் பூவலம்பேடு மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று நடைபெற்றது.
இதில் ஈகுவார்பாளையம் காரணிமங்கலம் புதுப்பாளையம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த
20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் மனுக்களை வழங்கினர். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன்
ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலபதி ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உடனுக்குடன் கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க அறிவுறித்தினர் பின்னர் மனுக்களை வழங்கிய பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா கலைஞர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் மணிபாலன் பூண்டி சந்திரசேகர் குணசேகரன் ரமேஷ் நாகராஜன் ஜோதி பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி