ரயிலில் அடிபட்டு மின் ஊழியர் பலி

66பார்த்தது
ரயிலில் அடிபட்டு மின் ஊழியர் பலி
திருவள்ளூர் மாவட்டம் ஆவூர் கிராமம், மேட்டு காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 56). இவர், பட்டாபிராம் துணைமின் வாரியத்தில், 'லைன் இன்ஸ்பெக்டராக' பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு மனைவி, மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர், நேற்று மாலை ஆவடி - இந்து கல்லுாரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து, அரக்கோணம் சென்ற விரைவு ரயில் மோதியது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது.

தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you