அருள்மிகு ஸ்ரீகெங்கையம்மன் ஆலய தீமிதி திருவிழா

77பார்த்தது
அருள்மிகு ஸ்ரீகெங்கையம்மன் ஆலய தீமிதி திருவிழா
செங்குன்றம் பம்மது குளம் பாரிநகர் அருள்மிகு ஸ்ரீகெங்கையம்மன் ஆலய தீமிதி திருவிழா

செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் பாரி நகர் அன்னை இந்திரா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகெங்கையம்மன் ஆலயத்தில் ஆறாம் ஆண்டு தீமிதி திருவிழாவும் 12ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவும் பாரிநகர் குடியிருப்போர் பொதுநலச் சங்கத் தலைவர் எஸ். மாரி தலைமையில் செயலாளர் ஜி. மோகன்தாஸ், பொருளாளர் பி. பழனி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பொது நலச் சங்க துணைத்தலைவர் பி. சீனிவாசன், இணைத்தலைவர் கே. பிரகலாதன், விழாக் குழு பொறுப்பாளர்கள் டி. ஸ்ரீபதி, கே. கார்த்திக், வி. எம். பாபு, ஏ. எஸ். முருகன், கே. பிரபு உள்ளிட்ட கிராம பொதுமக்கள், பக்த கோடிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் ஆலமரம் அருள்மிகு ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்திலிருந்து கங்கை நீர், பால் குடம் திரட்டுதல், கணபதி பூஜையுடன் கோபூஜை, கூழ்வார்த்தல், கும்ப படையல், கரகம் எடுத்தல், காப்புகட்டுதல், ஊஞ்சல் சேவை மற்றும் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு ஹோமத்துடன் திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தூபதீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி