நெல்லையில் மாணவர்களை பாராட்டும் முன்னாள் முதல்வர்

83பார்த்தது
நெல்லையில் மாணவர்களை பாராட்டும் முன்னாள் முதல்வர்
திருநெல்வேலி மாவட்டம் டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த வருடம் நீட் தேர்வு எழுதி 7. 5 சதவீத இட ஒதுக்கீட்டில் 6 மாணவிகள் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை பெற்றனர். இந்த மாணவிகளை பாராட்டி பரிசு வழங்குவதற்காக நாளை(செப்.6) காலை நெல்லைக்கு தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை தருகிறார். அதனை தொடர்ந்து வண்ணார்பேட்டை தனியார் ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 6 மாணவிகளையும் பாராட்டி பரிசுகள் வழங்குகிறார். இதற்கான ஏற்பாட்டினை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி