திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் யாதவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கந்தன் (28). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் இருந்த குத்து விளக்கை எடுத்து சென்று விற்று விட்டார். இதனை அவரது தாய் கண்டித்ததால் நேற்று (செப்.,21) இரவு மனமுடைந்த கந்தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.