ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு பாளையாயிரத்து அம்மன் திருக்கோவில் காவல் தெய்வமான பைரவருக்கு நேற்றிரவு அஷ்டமி மகா சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை ஒட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.