பாபநாசம் அருகே அகஸ்தியர் அருவியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ஏராளமான மக்கள் குளிக்க வந்தனர். முன்னதாக பாபநாசம் வன சோதனைச் சாவடியில் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் எடுத்து செல்லப்படுகிறதா என வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். மக்கள் எடுத்துச் சென்ற வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் செய்யப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்தது.