வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் கனமழை கொட்டி தீர்த்தது. பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, கேடிசி நகர் டவுண் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது.