தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் சார்பில் மேலப்பாளையத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நேற்று மாலை இறுதி போட்டி நடந்த நிலையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர். மேலப்பாளையம் எவரெஸ்ட் அணி 3வது இடம் பிடித்தது.