நெல்லை டவுண் தடிவீரன் கோயில் அமைந்துள்ள 63 நாயன்மார் மண்டபம் அறநிலையத்துறையால் கையகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாஜக கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் டவுன் பகுதியில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே பாதுகாப்புக்காக போலீசார் வரவழைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தினர்.